சமூகப் பிணைப்பைத் தக்கவைத்து, புத்தாக்கமிக்க சமுதாயத்தை உரு வாக்கும் வகையில் நமது கல்வி முறை இருக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் வலியுறுத்தியுள்ளார். "சிங்கப்பூரின் இப்போதைய கல்விமுறை, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைக் காட்டிலும் வேறுபட்டுள்ளது. 50 ஆண்டு களுக்கு முன்பிருந்ததை ஒப்பு நோக்க, முற்றிலும் வேறுபட்டுள் ளது. அந்தக் கல்வி முறை தொடர்ந்து பரிணமித்து வருகிறது. அதுவே எதிர்காலத்திற்கான சவா லாகவும் வாய்ப்பாகவும் அமையும்," என்று திரு தர்மன் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் நேற்று முன் தினம் நடந்த 'மாஜுலா' விரிவுரை யில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், சுமார் 1,500 மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் இவ்வாறு பேசினார். கல்விமுறையில் ஐந்து முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதாகத் துணைப் பிரதமர் தர்மன் குறிப்பிட்டார்.

