கடும் மறதி நோயாளிகளுக்கு உதவும் வீட்டு கவனிப்புத் திட்டம்

கடும் மறதி நோயாளிகளுக்கு உதவும் வீட்டு கவனிப்புத் திட்டம்

1 mins read

கடுமையான மறதிநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதிக் காலத்தை வீட்டிலேயே கழிப்பதன் மூலம் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர்கள் குறைந்த அளவிலான உடல் வலியை உணர்கிறார்கள் என்றும் ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்துள் ளது. அத்துடன் அவர்கள் மருத் துவமனைக்குச் செல்வதும் குறைந் துள்ளது. மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மறதிநோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு உதவ 'புரோ கிராம் டிக்னிட்டி' எனும் உடல் நோவு தணிக்கும் வீட்டு கவனிப் புத்திட்டம் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஊழியர்கள் நடத்திய ஆய்வு அறிக்கை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளி யிடப்பட்டது.