இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பேர் மரணம் அடைந்தனர். இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இன்னொருவர் சிகிச்சை பலனின்றி மாண்டார். காஷ்மீர் மாநிலத்தின் தலை நகர் ஸ்ரீநகரிலிருந்து ஏறத்தாழ 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டிரால் நகரில் கூட்ட நெரிசல் மிக்க பேருந்து நிலை யத்தில் இரு கையெறி குண்டு களைப் பயங்கரவாதிகள் வீசிய தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

