பயணிகளுக்கு ஆளாய் பறக்கும் ஓட்டுநர்கள்: நடவடிக்கை தீவிரம்

பயணிகளுக்கு ஆளாய் பறக்கும் ஓட்டுநர்கள்: நடவடிக்கை தீவிரம்

1 mins read
908fc9c6-4b30-4f10-ada3-bc7fbb000a9b
-

பயணிகளை வற்புறுத்தி தங்கள் பேருந்துகளில் ஏற்றிக் கொள்ள முயலும் ஓட்டுநர்களுக்கு எதிராக நிலப் போக்கு வரத்து ஆணையம் அமலாக்க நடைமுறைகளைத் தீவிரப் படுத்துகிறது. இத்தகைய காரியங்களுக்காக சென்ற ஆண் டிலும் அதற்கு முந்தைய ஆண்டிலும் கண்டிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பேருந்து ஓட்டுநர்கள் எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தனியார் பேருந்து நிலையங்களில், குட்டி பேருந்து போன்ற வாகனங்களில் பணியாற்றுபவர்கள். நிலப் போக்குவரத்து ஆணையம் அதிக போக்குவரத்து உள்ள வட்டாரங்களில் இனிமேல் அடிக்கடி சோதனைகளை நடத்தி இவர்களைக் கண்காணிக்கும்.