குடியிருப்புப் பேட்டை முகவர்கள் மன்றத்தின் ஒழுங்குமுறை குழு வின் நடத்தை மற்றும் நிபுணத்துவ முகவர் பராமரிப்பு நியதிகளை மீறி யதாகக் கூறும் இரண்டு குற்றச் சாட்டுகளின் பேரில் 'பிராப்நெக்ஸ் ரியாலிட்டி' என்ற சொத்துத் துறை நிறுவனத்தின் முகவர் இங் செர் லியோங், 44, என்பவருக்கு இந்த மன்றம் தண்டனை விதித்திருக் கிறது. முதிய தம்பதியர் தங்கள் வீட மைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை விற்க முயன்றபோது அவர்களைப் பிரதிநிதித்த இங், அப்போது நியதிகளுக்குப் புறம்பாக, தவறாக நடந்துகொண்டார் என்று குற்றச் சாட்டுகள் கூறுகின்றன. இங்கிற்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையே, ஏழு மாதங்கள் மற்றும் நான்கு மாதங்கள் அவர் குடியி ருப்புப் பேட்டை முகவராகப் பணி யாற்றக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தடை அக்டோபர் 19 முதல் ஒரே சமயத்தில் தொடங்கும் என்று இந்த மன்றம் அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது.

