குடும்ப நல்லிணக்கத்திற்கான தை ஹுவா குவான் நிலையம் காமன்வெல்த்தில் அதிகாரபூர் வமாக திறக்கப்பட்டு இருக்கிறது. மணவிலக்கு பெறும் பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் அந்த நிலையத்திலிருந்து அதிக ஆதர வைப் பெற முடியும். அந்த நிலையத்தை 'தை ஹுவா குவான் மாரல் சேரிட்டிஸ்' என்ற அறப்பணி அமைப்பு அமைத்துள்ளது. மணவிலக்கு பெறும்போதும் அதற்குப் பிறகும் தம்பதியரின் பிள்ளைகளுக்குத் தலைசிறந்தவை எவை என்பதைத் தீர்மானிக்கவும் அந்த நிலையம் அத்தகைய தம்பதிகளுக்கு உதவி செய்யும். நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். நான்கு மணவிலக்கு ஆதரவு சிறப்பு வல்லுநர் முகவை அமைப்பு களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஏற்படுத்தி இருக்கிறது. அதில் இந்த நிலையம் ஒன் றாகும். புதிய நிலையம் 2015 ஜனவரி 2 முதல் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் அது சர்க்கியூட் ரோட்டில் ஒரு தற்காலிக இடத்தி லிருந்து சென்ற ஆண்டுவரை செயல்பட்டுவந்தது. 2016ல் அது காமன்வெல்த்துக்கு இடம் மாறியது.
மணவிலக்கு பெறும் தம்பதிக்கு உதவும் புதிய நிலையம்
1 mins read

