தளவாட போக்குவரத்து துறை மேம்பட தேசிய தேர்ச்சித் திட்டம் தொடக்கம்

தளவாட போக்குவரத்து துறை மேம்பட தேசிய தேர்ச்சித் திட்டம் தொடக்கம்

1 mins read
09cda2fe-d228-4a68-acf4-9bc813e1c646
-

தளவாடப் போக்குவரத்துத் துறைக்குத் தேவைப்படும் புதிய தேர்ச்சிகள், வாழ்க்கைத்தொழில் வழிகள், வேலைகள் ஆகிய வற்றை அடையாளம் காணும் ஒரு தேசிய தேர்ச்சி ஆதரவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பொருளியல் வளர்ச்சிக் கழகம், 'ஸ்பிரிங் சிங்கப்பூர்', 'ஸ்கில்ஸ்ஃ பியூச்சர் எஸ்ஜி', 'வோர்க்ஃபோர்ஸ் சிங்கப்பூர்' ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்தத் திட்டம் இடம்பெறுகிறது. நாட்டின் தளவாட போக்குவரத் துத் தொழில்துறையை உருமாற்றி அந்தத் துறையை வளர்ச்சி அடைய வைக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் இடம்பெறுகிறது.

பிரதமர் லீ சியன் லூங் இந்த தேசிய தேர்ச்சித் திட்டம் பற்றி நேற்று விளக்கினார். சிங்கப்பூரில் தளவாடப் போக்குவரத்து என்பது முக்கியமான, நம்பிக்கை தரக் கூடிய ஒரு தொழில்துறையாக இருக்கிறது என்பதை அவர் சுட் டிக்காட்டினார். உலகத்தோடு நன்கு தொடர் புடைய விமான நிலையம், துறை முகங்கள் சிங்கப்பூரில் இருக்கின் றன. அவற்றின் மூலம் சிங்கப்பூரி லிருந்து வட்டாரம் முழுவதற்கும் தளவாட போக்குவரத்து நிறு வனங்கள் அருமையான சேவை யாற்ற முடிகிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.

பிரதமர் லீ சியன் லூங், ஒய்சிஎச் நிறுவனப் பேராளர்களுடன் சப்ளை செயின் சிட்டி கிடங்கைச் சுற்றிப் பார்த்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்