2018 தைப்பூசத் திருநாளன்று சந்திர கிரகணம்

2018 தைப்பூசத் திருநாளன்று சந்திர கிரகணம்

1 mins read

ப. பாலசுப்பிரமணியம்

அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசத் திரு விழா சிங்கப்பூரில் கொண்டாடப் படும். அந்நாளில் சந்திர கிர கணம் மாலை 6.51 மணிக்கு தொடங்கி பின்னிரவு 12.08 மணி வரை நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுவதால் ஆலயங்கள் முன்கூட்டியே மூடப்படும். அத னால், தைப்பூசக் கொண்டாட்டம் வழக்கத்தைவிட ஐந்தரை மணி நேரம் முன்னதாகவே முடிவுறும். எனினும் காவடிகளின் எண் ணிக்கை குறைக்கப்பட மாட் டாது என்று இரு ஆலயங்களும் கூட்டாகத் தெரிவித்தன. தைப்பூசத்தன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து 3.1 கிலோ மீட்டர் தூரம் கால்நடை யாக தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை அடைந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். கிரகணத்தின்போது சூரியன், சந்திரனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமிக்கு வருவது தடை படுகின்றன. இந்து சமயத்தில் இது உகந்த காலமாக கருதப் படாததால் இந்து ஆலயங்கள் அந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும்.