மனநோயாளிகளைப் பராமரிப்போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருநடை

மனநோயாளிகளைப் பராமரிப்போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருநடை

1 mins read

மனநோயாளிகளைப் பராமரிப்பவர் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'ராலே சிங்கப்பூர்' என்ற லாப நோக்கமற்ற தொண்டூழிய அமைப்பு 'லெட்ஸ் டேக் அ வாக்' என்னும் 100 கி.மீ. தூர நடைப் பயணத்தை நேற்று ஏற்பாடு செய்தது. இதில் 1,400க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நடைப்பயணம் நேற்று சிங்கப்பூர் தேசிய பொருட் காட்சியகத்தின் முன் தொடங் கியது. இது 10 கி.மீ., 50 கி.மீ., 50 கி.மீ. (இரவுப் பயணம்), 100 கி.மீ. என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டு களில் இந்த ஆண்டே அதிக மானோர் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். சுமார் ஆறு வயதுச் சிறார் முதல் 75 வயது முதியவர் வரை ஏராளமானோர் கலந்து கொண் டனர். இந்த நடைப்பயணத்தைத் தொடக்கி வைத்த மத்திய வட்டார மேயர் டேனிஸ் புவா தெரி விக்- கையில், "மனநோய் தொடர்பான விழிப்புணர்வு தற்சம யம் அதி கரித்து வருகிறது. இருப்பினும், பாதிக்கப் பட்டவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவர் களின் தேவையை அறிந்து செயல் படவும் அறிந்திருக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.