சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கி காய்ச்சல் பாதிப்பு அதிக ரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒரே நாளில் மூன்று பேர் டெங்கிக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் நாட்டிலேயே மிகத் தரமான கல்வி நிலையம் என்று போற்றப்படும் ஐஐடியில் படித்து வந்த மாணவரும் அடங்குவார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயதான பிரேம் அவினாஷ் என்ற அந்த மாணவர் சென்னை ஐஐடி மையத்தில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவருக்கு கடும் காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவினாஷுக்கு டெங்கி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதற்கிடையே சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம் கிரா மத்தைச் சேர்ந்த பாலசண்முகம் என்பவரது மனைவி பிரியாவும் டெங்கியால் உயிரிழந்துள்ளார். கடந்த 15 நாட்களாக அவருக்கு மதுரை தனியார் மருத்துவமனை யில் டெங்கி காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

