பெரிய உருவம், சத்தமான பிளிறல் கள், அவ்வப்போது தலையை ஆட்டிக்கொண்டு தன்னைப் பார்க்க வருபவர்கள் மீது தண் ணீரைப் பீய்ச்சும் தும்பிக்கை களோடு லிட்டில் இந்தியாவுக்கு வருபவர்களைக் கவர்ந்திழுக்கின் றன தீபாவளி யானைகள். பீடு நடை போட்டு அணி வகுத்து வரும் இயந்திர யானை களின் கண்கொள்ளா காட்சி, கிண்டா ரோடில் உள்ள புல்வெளிப் பகுதியில் அமைந்துள்ளது. 4டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த யானைகளைச் சுற்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் ஒரு கூட்டம் நிறைந்திருக்கிறது. தத்ரூபமாக உருவாக்கப்பட்ட நான்கு இயந்திர யானைகளுடன் பல குட்டி யானைகளும் அலங்கார வளைவுகளின் கம்பீர யானைகளும் இந்த ஆண்டு தீபாவளி அலங்காரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன.
'ராஜ அம்சம்' என்ற கருப் பொருளைக் கொண்டிருக்கும் இவ்வாண்டின் தீபாவளி அலங் காரங்களின் சின்னமாக மொத்தம் 26 ராஜ யானைகள் லிட்டில் இந்தியாவை வலம் வருகின்றன. பலவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் யானைகளை இம்முறை லிட்டில் இந்தியாவில் காணலாம். 'எல்இடி' மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இரு ராட் சத யானைகள் புக்கிட் தீமா சாலை, சிராங்கூன் சாலைகளின் சந்திப்பில் தேக்காவின் நுழை வாயில் வளைவில் வரவேற்கின்றன.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், திமத்தி டேவிட்

