குத்துச்சண்டைக்குப் பின் மாரணடைப்பால் பிரதீப் மரணம்

குத்துச்சண்டைக்குப் பின் மாரணடைப்பால் பிரதீப் மரணம்

1 mins read

'முவே தாய்' குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற உடற்கட்டழகர் பிரதீப் சுப்பிரமணியன், 32, போட்டி முடிந்த சிறிது நேரத்தில் உயிர் இழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக முதற்கட்ட மருத்துவ அறிக்கை கூறுகிறது. ஏஎஃப்சி ஹோல்டிங் நிறுவனத்தால் நேற்று முன்தினம் இரவு மரினா பே சேண்ட்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் போட்டியே திரு பிரதீப் பங்கேற்ற முதல் 'முவே தாய்' குத்துச்சண்டை போட்டி. அதில் யூடியூப் பிரபலம் ஸ்டீவன் லிம்முடன் அவர் மோதினார். பிறர் உதவியுடன் மேடையைவிட்டு வெளியேறிய திரு பிரதீப், உடனடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். உலக உடற்கட்டழகு, உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் தலைவரான திரு பிரதீப், தொடக்கத்தில் இப்போட்டியில் பங்கேற்பதாக இல்லை. ஆனால் காப்புறுதிப் பிரச்சினை காரணமாக பாடகர் சில்வெஸ்டர் சிம் போட்டியில் இருந்து திடீரென விலகியதையடுத்து திரு பிரதீப் களமிறங்கினார். திரு பிரதீப்பின் மரணம் குறித்த இறுதி அறிக்கை 30 முதல் 60 நாட்களுக்குள் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. படம் ஏ‌ஷியா ஃபைட்டிங் சாம்பியன்‌ஷிப்