வடகொரியாவை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது - விவியன்

வடகொரியாவை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது - விவியன்

1 mins read
1ed5ce69-4ed4-458d-be84-22dd2a6ef45f
-

வடகொரியாவின் பொறுப்பற்ற ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் ஐநா பொதுச் சபையில் உரையாற்றியபோது தெரிவித்தார். சினமூட்டும் செயல்களில் இனியும் ஈடுபடாதிருக்குமாறும் வடகொரியாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 72வது பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், கடந்த வாரம் மியன்மார் தலைநகரில் அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சியுடன் ஆலோசனை நடத்தியதை நினைவுகூர்ந்தார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்செயல்களும் மனிதாபிமானத்திற்குப் பேரவழிவை ஏற்படுத்தி விட்டதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.