அறப்பணியை நோக்கமாகக் கொண்ட சைக்கிளோட்ட சவால் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரதமர் லீ சியன் லூங் இதனைத் தொடங்கி வைத்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டேரல் டேவிட், லாம் பின் மின், அங் ஹின் கீ, கான் தியாம் போ ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 'அறப்பணிக்காக சைக்கிள் ஓட்டுவோம்' என்னும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் சைக்கிள் ஓட்டும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு கிலோ தீட்டப்படாத அரிசி அறப்பணிக்குக் கொடையாக வழங்கப்படும்.
ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள சமூகப் பூங்கா ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2,000 கிலோ தீட்டப்படாத அரிசி நன்கொடையாகத் °தரண்டது. 'அவ்வா'இ 'இரட்சணியர் படையின் கிரேஸ்ஹெவன்' இல்லம்இ அறிவுத்திறன் குன்றியோருக்கான மெட்டா பகல்நேர நடவடிக்கை நிலையம், அங் மோ கியோ ஹவ் காங் சமூக மேம்பாடு, நல்வாழ்வு நிதியம் ஆகிய அறப்பணி அமைப்புகளுக்கு அந்த அரிசி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
அறப்பணி சவால் சைக்கிளோட்ட நிகழ்ச்சியில் (இடமிருந்து) டேரல் டேவிட், பிரதமர் லீ, சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் °பன் மின். படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

