சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் கடந்த 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் உடல் இளைப்பு பொருட்கள், அழகுப் பொருட்கள் உட்பட 39,000க்கும் அதிகமான சட்டவிரோத சுகாதாரப் பொருட்களைக் பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு $133,000க்கும் அதிகம் என்று ஆணையம் கூறியது. இதில் ஒவ்வொரு பொருளின் மதிப்பு $12 முதல் $70 வரை. இணையத்தில் விற்பனை யாகும் சட்டவிரோத சுகாதாரப் பொருட்களை அடையாளம் கண்டு, அந்த விற்பனையைத் தடுக்கும் அனைத்துலக போலிஸ் உலகளவில் ஒருங்கிணைக்கும் 'ஆபரேஷன் பாங்கியா' என்ற நடவடிக்கையின் மூலம் இப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
39,000க்கும் அதிகமான சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்
1 mins read
-

