பள்ளி பேருந்து சேவைகள் மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தாங்கள் செலுத்திய வைப்புத்தொகைக்கும் சேவைக் கட்டணத்துக்கும் இனி அச்சப்படத் தேவையில்லை. சிங்கப்பூர் பயனீட்டாளர் சங் கமும் சிங்கப்பூர் பள்ளி போக்கு வரத்துச் சங்கமும் (எஸ்எஸ் டிஏ) இணைந்து இதற்கு வழிவகுக்கும் 'கேஸ்டிரஸ்ட்-எஸ்எஸ்டிஏ' கூட்டு அங்கீகாரத் திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தின. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெதெஸ்டா பாலர்பள்ளியின் பேருந்துச் சேவை வழங்குபவர் திடீரென்று சேவையை நிறுத்தி யதில் 70 பாலர் பள்ளி மாண வர்கள் பாதிக்கப்பட்டனர். அதே மாதத்தில், ரெட் ஸ்வாஸ்டிக்கா பள்ளிக்கும் கோரல் தொடக்கப் பள்ளிக்கும் சேவை வழங்கவிருந்த சிண்டோஸ் குழுமத்தின் சேவை திருப்தியளிக் கவில்லை என்பதால், ஒப்பந்தம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப் பட்டது.
பள்ளிப் பேருந்து: முன்கட்டண பாதுகாப்பு நடவடிக்கை
1 mins read
-

