பாலர் பள்ளி ஆசிரியராவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாலர் பள்ளி ஆசிரியராவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
6f98e5cb-993a-4315-9a97-332efa5964ef
-

பாலர்பள்ளி ஆசிரியராக இடைப் பருவத்தில் வாழ்க்கைத்தொழிலை மாற்ற பலரும் விரும்புகிறார்கள். ஆகவே இத்துறையில் பயிற்சி பெற விரும்புவோரின் எண்ணிக் கை உயர்ந்துள்ளது என்று மனித வள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார். இடைப்பருவ வாழ்க்கைத் தொழில் மாற்றம் செய்ய விரும்பு வோருக்காக பல அரசாங்க நிறு வனங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த நிபுணத்துவ வாழ்க்கைத் தொழில் மாற்றுத் திட்டத்தில் (PCP) பாலர் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெறு வோரின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டைக்காட்டிலும் சென்ற ஆண்டு 40% அதிகரித்துள்ளது. கடந்த 2009ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் தற்பொழுது பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,300 ஆக உயர்ந் துள்ளது என்றார் அவர். தோ பாயோவில் உள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' என்ற பிள்ளைகள் பராமரிப்பு மையத்தை அமைச்சர் நேற்றுப் பார்வையிட்டார். பள்ளிக்கு முந்திய கல்வித் துறையில் மனிதவளத் தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது 16,000 பாலர்பள்ளி ஆசிரியர்கள் உள் ளார்கள். வரும் 2020ஆம் ஆண் டுக்குள் மேலும் 4000 ஆசிரியர்கள் தேவைப்படலாம். 18 மாதங்கள் நடத்தப்படும் இப்பயிற்சியில் பங்கேற்போர், பணியில் இருந்த படியே பயிற்சி பெற்று அதற்கான ஊதியமும் பெறுகிறார்கள்.