பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடிய ஒற்றை தாய்மார்களுக்கு, குறிப்பாக துன்புறுத்தலால் பாதிக் கப்பட்டோருக்கு மேலும் அதிகள வில் உதவி செய்ய வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். "இளம்பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு பள்ளி யிலோ சமூகத்திலோ அவர்களுக்கு தக்க கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், வீட்டிலோ வீட்டுக்கு வெளியிலோ நண் பர்கள் மத்தியிலோ நடக்கும் துன் புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும்" என்று திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
"இளம்பெண்கள் எளிதில் ஆபத்தில் சிக்கக்கூடியவர்களாக வும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் உரிமைகள் என்ன என் பதை அறியாமலும் அவர்களால் என்ன செய்ய முடியும், மற்றவர்கள் செய்யகூடிய செயல்களில் எவற்றைத் தவிர்க்கலாம் என்பதை அறியாமலும் இருப்பார்கள். அதனால், சட்ட நடவடிக்கை மூலம் மட்டுமே துன்புறுத்தலை நிறுத்தமுடியாது. தக்க கல்வியும் விழிப்புணர்வும் தேவை," என்றும் அதிபர் தெரிவித்தார். பிரச்சினையை சந்திக்கக்கூடிய இளையர்கள் பெண்களுக்கான மையமான 'ஹெச்சிஎஸ்ஏ டேஸ்பிரிங்கை' பார்வையிட்ட பின் அதிபர் ஹலிமா இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
பதவியேற்ற இரண்டாவது வாரத்தில் தொடர்ந்து பல சமூகநல அமைப்புகளுக்குச் சென்று வருகிறார் அதிபர் ஹலிமா. நேற்று அவர் ஹெச்சிஎஸ்ஏ டேஸ்பிரிங்கிற்கு சென்றார். படம்: பெரித்தா ஹரியான்

