சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களில் ரசாயன புகை வாடை உணரப்பட்டதாக பலர் புகார் செய்துள்ளனர். செங்காங், யீஷூன், சிலேத்தார், அங் மோ கியோ, பீஷான் பகுதிகளிலிருந்து பலர் சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினர். இது பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குப் பலர் தொடர்புகொண்டதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படை தெரிவித்தது. விசாரணை நடத்தியதில் எந்தவித சம்பவமும் நடக்கவில்லை என்று படை தெரிவித்தது. பிளாஸ்டிக் எரிவதுபோல் வாடை இருப்பதாகவும் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய அளவிற்கு எரியும் வாடை இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர். இந்த நிலை குறித்து குடிமைத் தற்காப்புப் படையும் தேசிய சுற்றுப்புற வாரியமும் கண்காணித்து வருகின்றன.
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் ரசாயன புகை வாடை என புகார்
1 mins read
-

