விளக்குக் கம்பம் மீது கார் மோதியதில் ஆடவர் காயம்

விளக்குக் கம்பம் மீது கார் மோதியதில் ஆடவர் காயம்

1 mins read
cf56769e-b486-4bf5-b804-29cb87ecd42a
-

ஆர்ச்சர்ட் பொலவர்டில் விளக்குக் கம்பம் மீது கார் ஒன்று மோதியதில் 58 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் வெளியே 190 ஆர்ச்சர்ட் பொலவர்டில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து காலை 8.50 மணியளவில் தங்களுக்குக் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. டோம்லின்சன் ரோட்டுக்கு முன்னால் கிரேஞ்ச் ரோட்டை நோக்கிய பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. கார் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவர் சுயநினைவோடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் தமது கட்டுப்பாட்டை இழந்து விளக்குக் கம்பம் மீது மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விளக்குக்கம்பம் மீது கார் மோதியதாக நம்பப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்