நோயாளிக்கு சரியான ஆலோசனை வழங்காத மருத்துவருக்கு $30,000 அபராதம்

நோயாளிக்கு சரியான ஆலோசனை வழங்காத மருத்துவருக்கு $30,000 அபராதம்

1 mins read
84c4d47d-497a-4a4c-bcc3-5a8d891044de
-

கருவிழிப் படலத்தில் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்ட நோயா ளியை உடனே கண் மருத்து வரிடம் அனுப்பாமல், தானே சிகிச்சை அளித்து அவரது பார்வை பறிபோகும் நிலை ஏர்பட்டுள்ளதாக பொது மருத்து வர் ஒருவருக்கு நேற்று $30,000 அபராதம் விதிக்கப்பட்டது. பெண் ஒருவருக்கு கருவிழிப் படலத் தில் ஏற்பட்ட புண் மோசமாக பாதிப்படைந்த நிலை யில் கண் மருத்துவரிடம் சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதனால் அவரது இடது கண் ணின் பார்வையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிடோக் ரிசர்வோயர் ரோட் டிற்கு அருகேயுள்ள ஜாலான் டெகா, புளோக் 652ல் உள்ள அலையன்ஸ் கிளினிக் & சர்ஜரி என்ற மருந்தகத்தில் பொது மருத்துவ ராகப் பணிபுரிந்து வருகிறார்

53 வயது மருத்துவர் சிம் குவாங் சூன். சென்ற 2010, ஜூன் 16ஆம் தேதி கருவிழிப்படல புண்ணால் அவ திப் பட்ட தனது நோயாளியை கண் மருத்துவரிடம் அனுப்பாமல், "இந்த நோய் மிகவும் சாதாரண மானது. இதனால் கண் பார்வைக்கு எதுவும் பாதிப்பு ஏற் படாது. நிலைமை மோசமடைந்தால் மீண்டும் என்னை வந்து பாருங் கள்," என்று கூறி நோயாளியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பெண் வேறு ஒரு மருத்துவரின் ஆலோசனையையும் நாடினார். அந்த மருத்துவர் கருவிழிப்படலப் புண்ணின் நிலைமை மோசமடைந்திருப்பது கண்டு அந்தப் பெண்ணை உடனே மருத்துவமனை அவசரப் பிரிவுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார்.