பல்கலைக்கழக வெளிப்புறங்களிலும் தனியார் வாடகை கார்களிலும் புகைபிடிப்பதற்குத் தடை

பல்கலைக்கழக வெளிப்புறங்களிலும் தனியார் வாடகை கார்களிலும் புகைபிடிப்பதற்குத் தடை

1 mins read
9ae70933-6559-4efb-9806-f34b35d4cc16
-

பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், தனியார் வாடகை கார்களின் ஓட்டுநர்கள், பயணி கள் ஆகியோர் எதிர்வரும் ஞாயிற் றுக்கிழமை (அக்டோபர் 1) நடப்புக்கு வரும் புதிய கட்டுப் பாடுகளின்கீழ் புகைபிடிப்பதற்கு அதிக சிரமப்படுவார்கள். ப ல் க லை க் க ழ க ங் க ளி ன் வெளிப்புற இடங்களிலும், தனி யார் கல்வி நிலையங்களின் வளாகங்களிலும் அடுத்த மாதத் திலிருந்து புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது. புகைப்பதற்கென ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே புகைப்பிடிக்கலாம். ஆரம்பநிலைப் பள்ளிகள், மத்ராஸா பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழில் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து ஐந்து மீட்டர் தூரத்திற்குள் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்கப் படுகிறது. சுற்றுலா பேருந்துகள், ரிக்‌‌‌ஷாக்கள், தனியார் வாடகை கார்கள் ஆகியவற்றிலும் புகைபிடிக்க முடியாது. கிராம், ஊபர், கிராப் ஷேர், ஊபர்பூல் போன்ற பயணச் சேவைகளுக்குப் பயன்படும் கார்களும் இதில் உள்ளடங்கும்.