பல வேலைகளையும் முழுமையாகச் செய்யாமல் அரைகுறை யாக பாக்கிவைத்துவிட்ட புதுப்பிப்பு நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்து இருக்கிறது. வேலியன்சி என்டர்பிரைஸ் என்ற அந்த நிறுவனத்திற்கு எதிராக பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 26 வரை ஐந்து புகார்கள் வந்தன. அந்த நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான வெள்ளி பணத்தை வீட்டு உரிமையாளர்கள் கொடுத்திருந்தனர். ஆனால் நிறுவனம் புதுப்பிப்பு வேலைகளைக் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கவில்லை. அந்த நிறுவனத்துடன் வீட்டு உரிமையாளர்கள் தொடர்புகொள்ள முடியவில்லை. சங்கம் முயன்றும் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை.
ஒப்பந்த நிறுவனம் மாயம்
1 mins read

