மத்திய சேமநிதி முதலீட்டு திட்டத் தின் கீழ் பங்குகளிலும் யூனிட் டிரஸ்ட்டுகளிலும் முதலீடு செய்த உறுப்பினர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரைப் பட்ட 12 மாத காலத்தில் பொதுவாக லாபம் ஈட்டி இருக்கிறார்கள். மொத்த மசேநிதி சாதாரண கணக்கு முதலீட்டாளர்களில் 78% அல்லது 441,000 உறுப் பினர்கள் தங்கள் சாதாரண கணக்குத் தொகையை முதலீடு செய்து லாபம் ஈட்டினர். இந்த லாபம், அவர்களுடைய மசேநிதி சாதாரண கணக்கு தொகை ஈட்டிய ஆண்டுக்கு 2.5% வட்டி வருவாய்க்கும் மேலாகக் கிடைத்திருக்கிறது. 2015 செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த முந்தைய ஆண்டில் இப்படி முதலீடு செய்தவர்களைவிட இந்த எண்ணிக்கை 27% அதிகம். பங்குச்சந்தை மேம்பட்டதே 2016ஆம் ஆண்டில் நிலைமை சிறப்பாக இருந்ததற்குக் காரணம் என்று மசே நிதி அறிக்கை ஒன் றில் தெரிவித்தது.
சேமிப்பை முதலீடு செய்து லாபம் ஈட்டிய 441,000 மசே நிதி முதலீட்டாளர்கள்
1 mins read
-

