பிரதமர் லீ சியன் லூங் சென்ற மாதம் தேசிய தினப் பேரணியில் ஆற்றிய உரையில் முக்கியமாக மூன்று அம்சங்கள் பற்றி குறிப்பிட் டார். அவற்றில் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டம் ஓர் அம்சமாக இருந்தது. இதுவே சிங்கப்பூரர்களிடையே ஆக அதிகமாக எதிரொலிக்கிறது. அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ரீச் அமைப்பு தொலைபேசி மூலம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் 91% தேசிய அளவில் கவனம் பெறவேண்டிய நிலையில் கடுமையான ஒரு பிரச் சினையாக நீரிழிவு நோய் இருக் கிறது என்று தெரிவித்து இருக் கிறார்கள். பழுப்பு அரிசி போன்ற உட லுக்கு நலமான உணவுக்கு மாறிக் கொண்டு நீரிழிவு நோயைத் தடுத் துக்கொள்ளுங்கள் அல்லது அந்த நோயை வளரவிடாமல் தடுத்து விடுங்கள் என்று பிரதமர் தெரிவித் ததை தாங்கள் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கப்போவதாக 86% குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீரிழிவு நோய் பற்றிய பிரதமரின் தகவல் தங்கள் மனதில் முக்கிய இடம் பிடித்திருப்பதாக ரீச் அமைப் பிடம் தகவல் தெரிவித்த சிங்கப் பூரர்கள் கருதுகிறார்கள் என்று இந்த அமைப்பின் தலைவர் சேம் டான் தெரிவித்தார்.
நீரிழிவு நோய் ஒழிப்பு போர் தேசிய அளவில் முக்கியம் என 91% மக்கள் கருத்து
1 mins read

