11வது குடும்பச் செலவின ஆய்வு அடுத்த மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆய்வில் 13,100 குடும்பங்கள் பங்கேற்க இருக் கின்றன. இவை 26 பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று புள்ளிவிவரத் துறை அதன் அறிக்கையில் நேற்று குறிப்பிட்டது. முதல் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்கள் அங் மோ கியோ, புக்கிட் மேரா, சுவா சூ காங், ஹவ்காங், பாசிர் ரிஸ், சிராங்கூன் ஆகிய வட்டாரத்தைச் சேர்ந்தவை. அடுத்த ஓராண்டில் சிங்கப் பூரின் மற்ற வட்டாரங்களில் உள்ள குடும்பங்களிடமும் படிப்படியாக ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வு ஐந்து ஆண்டுக ளுக்கு ஒருமுறை நடத்தப்படு கிறது. குடும்பச் செலவு, சமூகப் பொருளாதாரப் பண்புகள் போன்ற தகவல்களை இந்த ஆய்வு சேகரிக்கும். அவற்றைப் பயன்படுத்தி குடும்ப வருமானத்துக்கும் செல வுக்கும் இருக்கும் தொடர்பு ஆராயப்படும். புள்ளிவிவரச் சட்டத்தின்படி ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல் கள் ரகசியமாக வைத்துக்கொள் ளப்படும்.
குடும்பச் செலவின ஆய்வில் 13,100 குடும்பங்கள் பங்கேற்பு
1 mins read

