அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள உணவு அங்காடி நிலை யத்துக்குள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த பொருளை வீசிய ஆடவர் நேற்று கைது செய்யப் பட்டார். கைது செய்யப்பட்டவர் சிங்கப்பூரர் என்று நம்பப்படுகிறது. அந்த 49 வயது ஆடவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தீப்பற்றி எரிந்த குழாய் போன்ற பொருள் ஒன்றை அங் மோ கியோ அவென்யூ 1 புளோக் 226Hல் அமைந்திருக்கும் கெபுன் பாரு உணவு அங்காடி நிலை யத்துக்குள் வீசியதாகக் கூறப் படுகிறது. வெடிக்கும் அபாயம் உள்ள பொருட்கள் தொடர்பாகக் கவன மின்மை குற்றத்தின் அடிப் படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அந்தப் பொருள் வீசப்பட்டதை அடுத்து அந்த உணவு அங்காடியின் ஒரு பகுதியைச் சுற்றி ஆறு மணி நேரத்துக்குத் தடுப்பு போடப்பட்டிருந்தது.

