போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய கனரக வாகனம்

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய கனரக வாகனம்

1 mins read
fba04e5d-5bef-430a-94b6-1a273fed71b7
-

அப்பர் சிராங்கூன் சாலையில் நேற்று காலை 9 மணியளவில் பழுதடைந்த கனரக வாகனத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 'அல்காஃப் விஸ்டா' தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டு கட்டுமான தளத்திலிருந்து கான்கிரீட் பலகைகளை ஏற்றிகொண்டு வெளியேறும்போது அந்த கனரக வாகனம் பழுதடைந்து நின்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. இயந்திரக் கோளாறினால் பழுதடைந்த அந்த வாகனம், அப்பர் சிராங்கூன் சாலையில் பல மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்தைப் பாதித்தது. அந்த வழியாகச் செல்லும் பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. பழுதடைந்த கனரக வாகனம், சாலையின் குறுக்கே நான்கு தடங்களையும் மறித்து, மற்ற வாகனங்கள் சாலையை பயன்படுத்த முடியாதபடி நின்றது. எதிர்திசையில் உள்ள சாலையின் ஒரு தடத்தை பாதிக்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தின.