ஆயர் ராஜா உணவு அங்காடி நிலையத்துக்கு அருகில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் 67 வயது மாது மரணம் அடைந்தார். அதிகாலை 6.26 மணி அளவில் வெஸ்ட் கோஸ்ட் சாலையை நோக்கிச் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் டாக்சி ஒன்று அந்த மாது மீது மோதியதாக போலிசார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர். போலிசார் சம்பவ இடத்தை அடைந்தபோது அந்த மாது சுயநினைவின்றி சாலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். கவனமின்மையுடன் டாக்சியை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்துக்காக 59 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கி மாது மரணம்; டாக்சி ஓட்டுநர் கைது
1 mins read

