துவாஸ் சோதனைச்சாவடி அருகில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தவரும் காயமுற்றனர். மோட்டார் சைக்கிள் மோதியதில் காட்டுப் பன்றி ஒன்று மாண்டது. துவாஸ் சோதனைச்சாவடியை அடுத்து ஆயர் ராஜா விரைவுச்சாலைக்குள் திடீரென்று காட்டுப் பன்றி ஒன்று நுழைந்ததால் விபத்து நிகழ்ந்தது. காயமுற்ற 38 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணம் செய்த 35 வயது பெண்ணும் இங் தெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி; காட்டுப் பன்றி பலி
1 mins read