கட்டுமானத்துறைக்கு மேலும் $700 மி.

கட்டுமானத்துறைக்கு மேலும் $700 மி.

1 mins read

நலிவடைந்துள்ள கட்டுமானத் தொழில்துறைக்குத் தூண்டு கோலாக, இத்தொழில்துறையின் ஆகப் பெரிய வாடிக்கையாளரான அரசாங்கம், $700 மில்லியன் மதிப்புள்ள பொது கட்டுமானத் திட்டப்பணிகளை இவ்வாண் டுக்கும் அடுத்த ஆண்டுக்கும் முன்கொண்டு வருகிறது. பிப்ரவரி மாத வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக் கப்பட்ட $700 மில்லியன் மதிப்புள்ள குத்தகைகளுக்கு மேலாக மேலும் $700 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக மன்றங்கள், விளையாட்டு மையங் கள், போலிஸ் சாவடிகள் போன்ற வற்றின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் இதில் உள்ளடங்கும். கட்டுமானக் குத்தகைகள் ஒவ்வொன்றும் பொதுவாக $100 மில்லியன் அல்லது அதைவிடக் குறைவான மதிப்புடையவையாக இருக்கும். இதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பயன் அடையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று கூறினார். சிங்கப்பூர் குத்தகை யாளர்கள் சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவு விருந்தில் பேசிய திரு வோங், கட்டுமானத்துறை எதிர்நோக்கும் சவால்களை அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கூறினார்.