பெட்ரா பிராங்கா தீவில் கடற்படை, போலிஸ் பயிற்சி

பெட்ரா பிராங்கா தீவில் கடற்படை, போலிஸ் பயிற்சி

1 mins read
50edb42e-0cda-404c-a2c5-a485434de480
-

சிங்கப்பூர் குடியரசு கடற்படையும் சிங்கப்பூர் போலிஸ் படையும் இணைந்து பெட்ரா பிராங்கா தீவில் கூட்டு பாதுகாப்புப் பயிற் சியை ஆகஸ்ட் மாதத்தில் மேற் கொண்டதாக சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சி முற்றிலும் பாவனை முறையில் நடத்தப்பட்ட பயிற்சி ஆகும். ஆயுதம் ஏந்திய ஒருவரை இடைமறித்து அச்சுறுத் தலை சமாளிப்பது போன்ற பயிற் சிகள் வழங்கப்பட்டதாக கடற் படை கூறியது. "பெட்ரா பிராங்கா தீவின் பாதுகாப்பை உறுதிபடுத்த இது போன்ற பயிற்சிகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும்," என்று ஃபேஸ்புக்கில் கூறப்பட்டது. பெட்ரா பிராங்கா தீவின் கண் காணிப்பை அதிகப்படுத்தி பாது காப்பு அச்சுறுத்தலை எதிர் கொள்ள பல மாதங்கள் திட்ட மிட்டும் தயார் செய்தும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது என்றும் கடற்படை கூறியது.

சிங்கப்பூர் குடியரசு கடற் படையின் வீரர்கள் பெட்ரா பிராங்கா தீவைப் பாது காக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். படம்: சிங்கப்பூர் குடியரசு கடற்படை