மார்பக புற்றுநோய் புரிந்துணர்வு மேம்பட மாதர்கள் மோட்டார் சைக்கிள் பவனி

மார்பக புற்றுநோய் புரிந்துணர்வு மேம்பட மாதர்கள் மோட்டார் சைக்கிள் பவனி

1 mins read
adba0576-7f14-4896-bbb7-f8d24b687bc8
-

மார்பக புற்றுநோய் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவது முக்கியம் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ளும்படி செய்தவதற்காக மாதர்கள் 33 பேர் மோட்டார் சைக்கிள்களில் தீவு முழுவதும் வலம் வந்தனர். இளஞ்சிவப்பு நிற உடையுடன் அவர்கள் ஒரு சாதனை படைத்தனர். 21வது மார்பக புற்றுநோய் மாதம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் புற்றுநோய் தடுப்புச் சங்கம் ஏற்பாட்டில் முதலாவது இளஞ்சிவப்பு நாடா அணிவகுப்பு நடந்தது. அதில் 33 பெண்கள் தொண்டூழியர்களாக மோட்டார் சைக்கிளில் கலந்துகொண்டு தீவு முழுவதும் 31 கி.மீ. வலம் வந்தனர். 'அவர் தெம்பனிஸ் ஹப்பில்' தொடங்கி 6 மணி நேரம் கழித்து தோ பாயோ ஹப்பில் அவர்களின் பயணம் முடிவடைந்தது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய மாதர் மோட்டார் சைக்கிள் பவனி என்ற சாதனையையும் அவர்கள் படைத்தார்கள். இளஞ்சிவப்பு நாடா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.