தேசிய முதியோர் பயிலகத்தில் இந்த ஆண்டில் 900க்கும் மேற் பட்ட பயிற்சிகளும் 21,000 பேருக்கு இடமும் இருக்கும் என் பதால் மூத்த குடிமக்கள் தங்களு டைய மூளைக்கு வேலை கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கும். கடந்த ஆண்டில் 500 பயிற்சி களும் 10,000 இடங்களும் இந்தப் பயிலகத்தில் இருந்தன. அனைத்துலக முதியோர் தினத் தைக் குறிக்கும் வகையில் நேற்று நடந்த கொண்டாட்ட நிகழ்ச் சியில் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இந்த விவ ரங்களைத் தெரிவித்தார். முதியோர் பலதரப்பட்ட துறை களில் பலவற்றையும் கற்றுக் கொள்ள இந்தப் பயிலகம் வழி வகுக்கிறது. தகவல் தொழில்நுட் பம் முதல் கலைகள் வரை பல துறைகளிலும் பலவித பயிற்சி களில் கலந்துகொண்டு முதி யோர் சுறுசுறுப்பாக இருக்க இந்தப் பயிலகம் உதவுகிறது.
மூளைக்கு வேலை கொடுக்க முதியோருக்கு அதிக வாய்ப்புகள்
1 mins read
-

