வாகனங்களை நிறுத்தி வைப்பதற் கான புதிய செயலி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே வாகன உரிமை யாளர்கள் அதற்கு ஆதரவு தெரி வித்து இருக்கிறார்கள். Parking.sg என்ற அந்தச் செயலி, பொது கார் பேட்டைகளில் வாகனங்களை நிறுத்திவைக்க கூப்பன்களைப் பயன்படுத்துவ தற்குப் பதிலாக நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அந்தச் செயலியைத் தங்களு டைய கைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்ட மூன்று பேர் செய லியைப் பதிவிறக்கம் செய்வது எளிதாக இருப்பதாகக் கூறி னார்கள். இருந்தாலும் ஏராளமானவர்கள் இனிமேல்தான் செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். Parking.sg செயலி அதிகமாக பயன்பாட்டுக்கு வரும்போது தாங்கள் அதைப் பதிவிறக்கம் செய்யப்போவதாக 10 பேரில் ஏழு பேர் தெரிவித்து இருக்கிறார்கள். சில வாகன உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் கூப்பன்கள் முடியட்டும் என்று காத்திருக்கிறார் கள். கூப்பன்கள் அறவே புழக்கத்தில் இல்லாதபோது தாங்கள் செயலியைப் பயன்படுத்தப்போவ தாக முதியவர்கள் கூறினர்.
Parking.sg என்ற புதிய செயலியை அரசாங்கத்தின் GovTech அமைப்பு உருவாக்கி இருக்கிறது. இதை நேற்று முதல் சுமார் 1,100 கார் பேட்டைகளில் பயன்படுத்தலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

