தற்காப்பு சமூக உறவு ஆலோசனை மன்றத்தின் (அக்கார்ட்) தலைவராக இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் பதவி ஏற்றிருக்கிறார். மூத்த தற்காப்பு துணை அமைச்சர் மாலிக்கி ஓஸ்மானிடமிருந்து அந்தப் பொறுப்பை திரு ஓங் ஏற்று இருக்கிறார். டாக்டர் மாலிக்கி, அந்த மன்றத் தின் தலைவராக இரண்டு ஆண்டு பதவி வகித்தார். சிங்கப்பூரின் தற்காப்பு தொடர் பான பிரச்சினைகள் பற்றி பொது மக்கள் கருத்துகளைத் தெரிவிக்க இந்த மன்றம் ஒரு தளமாகச் செயல்படுகிறது. டாக்டர் மாலிக்கி தலைவராக இருந்தபோது தேசிய சேவையை அங்கீகரித்து ஆதரவு அளிக்க தற்காப்பு அமைச்சிடம் தாக்கல் செய்யப்பட்ட 18 யோசனைகள் நடைமுறைக்கு வந்தன. இந்த மன்றம் இப்போது தொழிற்சங்கங்கள், நிறுவனங்களு டன் வலுவான உறவைக் கொண் டிருக்கிறது. தேசிய சேவை பற்றியும் தற் காப்பு குறித்தும் மாதர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் மன்றம் இப்போது மேலும் பல மாதர்களை எட்ட முடிகிறது.
தற்காப்பு ஆலோசனை மன்றத் தலைவர் ஓங்
1 mins read
-

