புகைப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகப் புதிய மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புகையிலை (விளம்பர, விற் பனை கட்டுப்பாடு) சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைக்கும் புதிய மசோதா, மின்-சிகரெட் போன்ற போலி புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும் சட்டவிரோதமாக்கும். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் முதல் வாசிப்புக்காக மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா வேறொரு நாடாளுமன்ற அமர்வின்போது விவாதிக்கப்படும். புகைப்பிடிக்க சட்டப்படி அனு மதிக்கப்படும் வயதை உயர்த்து வதன்மூலம் "இளையர்கள் 21 வயதை எட்டு வதற்கு முன் புகைப் பிடிக்க ஆசைப்படவும் புகைப்பிடிக் கவும் வாய்ப்புகள் எழுவதைக் குறைப் பதும், கால ஓட்டத்தில் இந்த வாய்ப்புகளை முற்றிலும் நீக்கு வதும்," நோக்கம் என மசோதா வுடன் இணைக்கப்பட்ட விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் புகைப்பிடிப்பவர் களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை 18 வயதுக்கும் 21 வயதுக்கும் இடையில் தொடங்குகின்றனர். புகைப்பழக்கத்தைக் கைவிட்ட வரான நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுவிஸ் இங், பரிந்துரைக்கப்படும் சட்டத் திருத்தம் "முக்கியமான முன் னேற்ற நடவடிக்கை" என்று கூறினார்.
புகைப்பிடிக்க வயது வரம்பு 21 ஆக உயரலாம்
1 mins read
-

