தமது பாதுகாப்புக்குப் பொறுப் பேற்றுள்ள பாதுகாப்பு அமைப்பு களின் ஆலோசனையின்பேரில், யீஷூன் அடுக்குமாடி வீட்டி லிருந்து வெளியேறுகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப். பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, "தற்போதைய வீட்டில் திருவாட்டி ஹலிமா தொடர்ந்து தங்கியிருந் தால், அவரது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் பாதுகாப்பு அமைப்புகள் பல சவால்களை எதிர்நோக்கும்," என திருவாட்டி ஹலிமாவிடம் தெரியப்படுத்திய தாக உள்துறை அமைச்சுக் கூறியது. "வேறிடத்திற்குச் செல்வது பற்றி பரிசீலிக்குமாறு அதிபரிடம் உள்துறை அமைச்சு ஆலோ சனை கூறியுள்ளது. பாதுகாப்பு அமைப்புகள் அதிக உத்தரவாதத் துடன் அவரைப் பாதுகாக்க இது துணைபுரியும்," என்று அமைச்சின் அறிக்கை குறிப் பிட்டது.
அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேறும் அதிபர் ஹலிமா
1 mins read
-

