சுதாஸகி ராமன்
தம்முடைய அடுத்த இந்தித் திரைப்படமான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' எனும் படத்தை விளம்பரம் செய்வதற்கு சிங்கப்பூர் வந்துள்ளார் பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமீர் கான். சிங்கப்பூருக்கு முதல்முறையாக அவர் வந்திருக் கிறார். உலகப் புகழ்பெற்ற பாடகி ஆகவேண்டும் என்ற கனவு கொண்ட 14 வயது இன்சியாவின் கதையே 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்'. சவால்களை மீறி இலக்கை அந்தச் சிறுமி எவ்வாறு அடைந்தார் என்றும் சுற்றி இருப்பவர்களை எவ்வாறு மாற்றினார் என்பதையும் பற்றியது இத்திரைப்படம். கனவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் விசித்திரமான குணாதிசயங்கள் உடைய பாடகர் சக்தி குமாரை சந்திக்கிறார் இன்சியா. சக்தி குமார் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் அமீர் கான். அத்வைத் சந்தனின் இயக்கத் தில் வரும் இம்மாதம் 19ஆம் தேதி இத்திரைப்படம் சிங்கப்பூரில் வெளியிடப்படுகிறது.
'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' எனும் படத்தை விளம்பரம் செய்வதற்காக சிங்கப்பூர் வந்திருக்கும் பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான். படம்: திமத்தி டேவிட்

