தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்குப் புதிய அதிகாரம்

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்குப் புதிய அதிகாரம்

1 mins read

பொது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்க நிதி உதவி பெறும் அரசுசாரா அமைப்புகளைத் தணிக்கைச் செய்யும் அதிகாரம் தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. கணக்குத் தணிக்கைச் சட்டத்திற்கான மாற்றங்களை நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியது. அந்த மாற்றங்கள் இத்தகைய அதிகாரத்தை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிக்கு வழங்குகின்றன. இந்த விவரங்களை நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று மன்றத்தில் தெரிவித்தார். தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் ஆண்டுதோறும் அரசாங்க அமைப்புகளைத் தணிக்கைச் செய்கிறது. குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அது தணிக்கைகளைச் செய்வதில்லை என்று குமாரி இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் விளக்கினார்.