சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்த சுமார் 1,800 வெளிநாட்டு மாணவர்கள் நிராகரிக்கப்பட்டதாக கல்விக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி லோ யென் லிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "நம்முடைய அரசாங்க பள்ளிக்கூட முறை சிங்கப்பூரர் களான மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது," என்று மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி உறுப்பினர் ஓங் டெங் கூனுக்கு அளித்த பதிலில் திருவாட்டி லோ குறிப்பிட்டார். "தகுதி உள்ள வெளிநாட்டு மாணவர்கள் சிங்கப்பூர் பள்ளி களில் படிப்பதை நாம் வரவேற்கிறோம்," என்று அவர் குறிப் பிட்டார்.
1,800 வெளிநாட்டு மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியில் இடமில்லை
1 mins read

