புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வடிவமைப்புக் கோளாறுகளைச் சரிப்படுத்த குத்தகை

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வடிவமைப்புக் கோளாறுகளைச் சரிப்படுத்த குத்தகை

1 mins read
e7580ffe-b6e3-4de2-9f7d-59c0fd294eec
-

புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் சேவை கட்டமைப்பைச் செப்பனிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்தக் கட்டமைப்பின் வடிவமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் என்று இரண் டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். இந்த ரயில் சேவை கட்டமைப் பில் அடிக்கடி கோளாறுகள் ஏற் பட்டதற்கு அதன் வடிவமைப்பே முக்கிய காரணமாக இருந்துள் ளது. கட்டமைப்பைச் செப்பனிடு வதற்கான ஏலக்குத்தகையைத் தாக்கல் செய்யும்படி அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியில் அறி விப்பு விடுக்கும். புக்கிட் பாஞ்சாங் இலகுரக சேவை அமைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கட்டமைப்பின் வடிவமைப்பு விமானநிலைய பாணியில் ஆனது. அந்த வடிவமைப்பு குடியிருப்புப் பேட்டைச் சூழலில் அமைக்கப்பட் டது என்று அமைச்சர் தெரி வித்தார். அந்த நேரடியான தண்டவாள வழித்தட வடிவமைப்பு திடீர் திடீ ரென வளைந்து வளைந்துச் செல் லும் மேடுபள்ளமான இடத்தில் பயன்படுத்தப்பட்டது. இதனால் மின்சாரம் அடிக்கடி தடைப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் அமைச் சர் விளக்கினார்.

புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில். இந்தக் கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைய குத்தகை வழங்கப்பட இருக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்