ராணுவ முகாம்களில் கைபேசி: அமைச்சர் இங் விளக்கம்

ராணுவ முகாம்களில் கைபேசி: அமைச்சர் இங் விளக்கம்

1 mins read
1649e790-00c0-4ca0-a48c-2642ea9fce8a
-

சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம் களிலும் கட்டடங்களிலும் சேவையாளர்களுக்கு அதிக நீக்குப் போக்கையும் அதேநேரத்தில் பாதுகாப்பையும் சமநிலைப் படுத்தும் நோக்கத்தில் பாது காப்பிடங்களை வகைப்படுத்தும் நடைமுறை நற்பலன் தந்துள்ளது. அதனால் பாதுகாப்பிற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்து இருக்கிறார். ராணுவ முகாம்களில் 2016 மார்ச்சில் நவீன கைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கை தளர்த்தப்பட்டது முதல் இந்த வாய்ப்பை சிங்கப்பூர் ஆயுதப்படை படை வீரர்கள் எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று டாக்டர் லீ பீ வா கேட்டிருந்தார். பச்சை, சிவப்பு மண்டல முகாம்களில் பணியாற்றும் வீரர்களில் 10%க்கும் குறைந்த வர்கள் தங்கள் கைபேசி படச் சாதனத்தை அணைத்துவிடு கிறார்கள். பெரும்பாலானவர்கள் பச்சை மண்டலங்களில் செயல் படுவதும் சிவப்பு மண்டலங் களுக்குள் செல்வதற்கு முன்பாக தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வீரர்கள் வைத்து விடுவதும் இதற்குக் காரணம். சில சேவையாளர்கள் புகைப் படச்சாதனம் இல்லாத கைபேசியைப் பயன்படுத்து கிறார்கள் என்றார் அமைச்சர்.