அடிப்படை வசதிகளை பாதுகாக்க புதுச் சட்டம்

அடிப்படை வசதிகளை பாதுகாக்க புதுச் சட்டம்

1 mins read

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து சிங்கப்பூரின் முக்கியமான அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. சிங்கப்பூரின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளைப் பாதுகாக்க மிகவும் முறைப்படுத்தப்பட்ட ஒரு வழி தேவைப்படுகிறது என்று இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் 'அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் பாதுகாப்புச் சட்டம்' என்ற ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் அறிவித்தார். அந்தச் சட்டம் அடிப்படை கட்டமைப்பு பாதுகாப்பிற்கு உரிய தெள்ளத்தெளிவான ஒழுங்கு முறை திட்டத்தைத் தோற்றுவிக் கிறது என்றும் அது பயங்கர வாதத்திற்கு எதிரான பரந்த அளவிலான உத்தியின் ஓர் அங்கம் என்றும் அமைச்சர் டியோ குறிப் பிட்டார்.