டன்யர்ன் சாலையில் நேற்றுக் காலை நடந்த விபத்தில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதில் 3 கார்களும் 2 பேருந்துகளும் விபத்துக்குள்ளாயின. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு காலை மணி 8.40க்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது என சீன நாளிதழான வான் பாவ் செய்தி வெளியிட்டது. 64 வயது ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என போலிசார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான போலிஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
டன்யர்ன் சாலையில் 3 பேருந்துகளும் 2 கார்களும் மோதி விபத்து
1 mins read

