சிங்கப்பூரில் உள்ள சுமார் 470 பாலர் பள்ளி நிலையங்கள் வேலை யிடத்திலேயே அமைந்துள்ளன. வர்த்தகக் கட்டடங்கள், அர சாங்கக் கட்டடங்கள், தொழிற் பேட்டைகள் ஆகிய இடங்களில் அவ்வாறு பாலர் பள்ளிகள் அமைந் துள்ளன என்று நேற்று நாடாளு மன்றத்தில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார். வேலையிடங்களில் உள்ள பாலர் பராமரிப்பு நிலையங்கள் குறித்து நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா கேள்வி எழுப்பியிருந்தார். வேலையிடங்களில் பாலர் பள்ளி பராமரிப்பு வசதிகள் அமை வதை அமைச்சு ஊக்கமூட்டுமா என்றும் அவர் கேட்டார். இது குறித்து பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருக் கிறது என்று கூறிய அவர், "தங் களுடைய இடத்தில் பாலர் பரா மரிப்பு வசதிகளை அமைப்பதை முதலாளிகள் பரிசீலிப்பதும் அவற் றில் ஒன்று," என்றார்.
வேலையிடங்களில் 470 பாலர் பள்ளி நிலையங்கள்
1 mins read
-

