தடை செய்யப்பட்ட இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதக் கடிதம்

தடை செய்யப்பட்ட இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதக் கடிதம்

1 mins read
e3f0cdfe-6472-44a8-9c4a-1abf20dfc76c
-

தடை செய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்த குற்றத்திற் காக கடந்த ஆண்டு 19,000 அபராதக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கையில் 2,600 பேர் உணவு நிலையங்களில் புகைபிடித்தவர்கள் என்று சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார். ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் புவா கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லா பொது இடங்களிலும் புகைபிடிப்பதை தடை செய்வதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்கு," என்றார். புகைபவர்களுக்கு அருகில் உள்ள புகை பிடிக்காதவர்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் கூறினார். தற்போது 32,000 பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லா இடங்களையும் தேசிய சுற்றுப்புற வாரியம் கண்காணிக்க முடியாது என்று அமைச்சர் சொன்னார்.