'பள்ளிகளில் தொல்லை கொடுத்தலை சகித்துக்கொள்ள முடியாது'

'பள்ளிகளில் தொல்லை கொடுத்தலை சகித்துக்கொள்ள முடியாது'

1 mins read
d426ee47-60d3-437f-aabb-7995998372f4
-

தொல்லை கொடுத்தல் எந்த வடிவில் இருந்தாலும் சகித்துக் கொள்ள முடியாது என்று கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "சிங்கப்பூர் பள்ளி களில் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான உணர்வைப் பெற உரிமையிருக்கிறது," என்றார். இணைப்பேராசிரியர் டேனியல் கோ, பள்ளிகளில் இடம்பெறும் தொல்லை கொடுத்தல் பற்றி கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர்கள், மாண வர்கள் ஆகி யோருக்கான நடவடிக்கைகள் குறித்தும் திரு டேனியல் கோ கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் செயின்ட் ஹில்டா உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதைக் காட்டும் காணொளி ஊடகங்களில் பரவி யது. அப்போது அங்கு இருந்த பயிற்சி ஆசிரியரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை அதற்கான பயிற்சியோ அதி காரமோ அவர் பெற்றிருக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் அப்போது கூறியிருந்தது. நாடாளுமன்றத்தில் மேலும் பேசிய அமைச்சர் இங், "இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழக் கூடியவை அல்ல," என்றார்.

சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் மாணவரை தொல்லைப்படுத்தும் மற்றொரு மாணவர். கோப்புப் படம்