பயங்கரவாதச் சித்தாந்தம், தனி யுரிமை நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள், இஸ்லாமிய எதிர்ப் புணர்வு ஆகிய மூவகை மிரட் டல்களையும் உணர்ந்திருக்கும் சிங்கப்பூர் மலாய், முஸ்லிம் சமூகம், அவற்றைச் சமாளிக்க பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் நேற்று கூறினார். இஸ்லாமியக் கல்லூரி அமைத்தல், தீவிரவாதச் சிந்த னையை எதிர்க்கவும் சமூக ஊட கத்தில் இளையர்களை எட்டவும் பயிற்சி அளித்தல், புதிய தலை முறை இளம் சமய ஆசிரியர்களை உருவாக்குதல் போன்றவை இதில் உள்ளடங்கும். தகவல் தொடர்பு அமைச்சரு மான டாக்டர் யாக்கூப், "நாம் அனைவரும், இனம் அல்லது சமய வேறுபாடின்றி, இந்த மூவகை ஒற்றுமையின்மை சிங்கப்பூரில் வேரூன்ற விடாமல் முறியடிக்க வேண்டும். அனைத்து இன மக்களும் பரஸ்பர மரியாதையோடும் சமத்துவத் தோடும் ஒன்றுசேர்ந்து வாழும் பல இனக் கொள்கையின் அடிப்படையில் தோற்றுவிக்க நம் நாட்டின் நிலைப்பாட்டுக்கான மிரட் டல் இது," என்று நாடாளுமன்றத் தில் கூறினார்.
பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கும் மலாய், முஸ்லிம் சமூகம்
1 mins read
-

