புக்கிட் பாஞ்சாங்கில் பாதுகாப்புத் தடுப்புகளை அமைக்கும் பணி நிறைவு

புக்கிட் பாஞ்சாங்கில் பாதுகாப்புத் தடுப்புகளை அமைக்கும் பணி நிறைவு

1 mins read
c31e31ac-dc2c-4916-83dc-9c983cb5952d
-

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அனைத்து இலகு ரயில் நிலையங் களிலும் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்கும் பணி நிறைவுக்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் பயணிகள் விழுந்துவிடுவதைத் தடுப்பதற் காக ரயில் நிலையங்களில் பாது காப்பு தடுப்புகள் அமைக்கப் பட்டு வருகின்றன. இப்பணி புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் நிலையங்களில் நிறைவடைந்துள்ளது என்று இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் தெரி வித்தார். ஆனால் செங்காங்-பொங் கோல் இலகு ரயில் நிலையங் களில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்கும் பணி அடுத்த ஆண் டில் முடிவடையும் என்றார் அவர். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமைச்சர் இங், புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையை நடத்தும் நிலப்போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டியும் தண்டவாளத்தில் நடக்கும் சம் பவங்களை எச்சரிக்கும் வீடியோ பகுப்பாய்வு முறையை சோதித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஃபாஜார் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகள். கோப்புப் படம்